மின்சாரம் தாக்கி பெண் பலி
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே தும்மக்குண்டு இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி தமிழ்ச்செல்வி 50, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கணவர் மற்றும் மகன்கள் அனைவரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை வீட்டில் மராமத்து வேலைக்காக தமிழ்ச்செல்வி மோட்டாரை போட்டு சுவரில் தண்ணீர் தெளித்துள்ளார். அருகில் தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயரை தெரியாமல் தொட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
வாடிப்பட்டி: போடிநாயக்கன்பட்டி சவுந்தரபாண்டி 38, பெயின்டர். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி 30, மற்றும் 7, 5 வயதில் முறையே மகள், மகன் உள்ளனர். இவரது குடிப் பழக்கத்தால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இதனால் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மது அருந்திவிட்டு டூவீலரில் வந்த சவுந்தரபாண்டிக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சவுந்தரபாண்டியை மனைவி கண்டித்தார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சவுந்திரபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.