ADDED : ஜன 28, 2024 05:19 AM
6 பேர் காயம்
மேலுார்: தொன்காசி மாவட்டம் மாங்குடி கார்த்தி33. ஆந்திராவில் தென்னந்தோப்பு குத்தகைக்கு எடுத்து கள் இறக்கும் தொழில் செய்கிறார். ஜன.,26ல் உறவினர்கள் ஆறு பேருடன் ஆட்டோவில் ஆந்திரா புறப்பட்டார். கார்த்தி ஓட்டினார். மேலுார் சத்தியபுரம் அருகே எதிரே வந்த லாரி மோதியதில் கார்த்தி, உறவினர்கள் காவுகனி 54, காளியம்மாள் 50, கணேசன் 42, உட்பட 6 பேர் காயமுற்றனர். எஸ்.ஐ., சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.
ஒருவர் பலி
மேலுார்: மதுரை தெப்பக்குளம் பாலமுருகன் 28. இவரது நண்பர் வில்லாபுரம் ஸ்ரீராம் 20. இருவரும் கூலி தொழிலாளிகள். செம்மனிபட்டியில் மஞ்சுவிரட்டை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திரும்பினர். ெஹல்மெட் அணியவில்லை. பாலமுருகன் டூவீலரை ஓட்டினார். விநாயகபுரம் அருகே டூவீலர் நிலைத் தடுமாறி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஸ்ரீராம் இறந்தார். எஸ்.ஐ., சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.
மாணவர் பலி
மேலுார்: பெரிய இலந்தைகுளம் நவநீதகிருஷ்ணன் 7. அதே ஊரில் 2ம் வகுப்பு படித்தார். நேற்றுமுன்தினம் பெரியாற்று கால்வாய்க்கு சென்ற வர் தடுமாறி தண்ணீரில் விழுந்தார். கீழவளவு அருகே அரியூர்பட்டியில் உடல் மீட்கப்பட்டது.