மனஉளைச்சலால் தற்கொலை
மதுரை: பெருங்குடி பர்மா காலனி பாலகுமார் 30. உறவினர்கள் சிவக்குமார், மனைவி நந்தினியிடம் தீபாவளி பண்டு சேர்ந்தார். காலனி மக்கள் 108 பேரிடம் வசூலித்து ரூ.6 லட்சம் கொடுத்த நிலையில் இருவரும் ஏமாற்றினர். இதனால் வீட்டை ஒத்திவைத்து அதில் கிடைத்த தொகையை 108 பேருக்கு பாலகுமார் தந்தார். சிவக்குமாரும், நந்தினியும் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புலம்பி மனஉளைச்சலுக்குள்ளாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வழக்கறிஞர் வீட்டில் திருட்டு
உசிலம்பட்டி: குப்பாஞ்செட்டியார் தெரு வழக்கறிஞர் மனோஜ்குமார் மனைவி ராஜி 28. சில மாதங்களுக்கு முன்பு மனோஜ்குமார் இறந்துவிட்டார். நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கினார். அவரது வீட்டினுள் புகுந்த நபர், பீரோவை உடைத்து ரூ. 60 ஆயிரத்தை திருடிச் சென்றார். உசிலம்பட்டி போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். முகமூடி அணிந்த ஒருவர் ஈடுபட்டது தெரிந்தது.