ADDED : ஜன 11, 2024 03:50 AM

3 கிலோ நகை பறிப்பு முயற்சி: 2 பேர் கைது
மதுரை: ஜன.6 அதிகாலை மதுரை நகைக்கடை பஜாரில் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 3 கிலோ தங்க நகைகளுடன் வந்த இருவரை தாக்கி கொள்ளை முயற்சி நடந்தது. இதுதொடர்பாக வலையபட்டி ரஹீம் 25, தெற்குவாசல் யாசர் அரபத் 30, ஆகியோரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.
பள்ளியில் ஆசிரியர் இறப்பு
மதுரை: கண்ணனேந்தல் ஜெயசீலன் 54. முடக்கத்தான் அரசு ஒன்றியப்பள்ளி ஆசிரியர். நேற்றுமுன்தினம் மாலை பள்ளியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் திருட்டு
மதுரை: சிந்தாமணி மதன்குமார் 39. இவரது வீட்டில் 17 பவுன் நகைகள் திருடுபோயின. மகன் முத்துவேல், அவரது நண்பர் சரவணனிடம் கீரைத்துறை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரித்து வருகின்றனர்.
வளர்த்த காளை குத்தியதில் வாலிபர் பலி
மதுரை: மதுரை ஐராவதநல்லுார் கல்லம்பல் ரோட்டை சேர்ந்தவர் காசி 29. இவர் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளை, நேற்று இரவு கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.