ADDED : ஜன 04, 2024 02:38 AM
கத்தியால் குத்தியவர் கைது
திருமங்கலம்: கூழையாபுரம் அரவிந்த்குமார் 27. அதே பகுதியைச் சேர்ந்தவர் மருதநாயகம் 27. குடிபோதையில் இருவரும் தகராறில் ஈடுபட, கத்தியால் அரவிந்த்குமாரை மருதநாயகம் குத்தியதாக கைதுசெய்யப்பட்டார்.
பாட்டிலால் குத்திய பேரன் கைது
திருமங்கலம்: குண்டனம்பட்டி ஜெயபால் 35. மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசிக்கிறார். தந்தை தனிக்கொடியின் அம்மா செல்லத்தாயியை 80, அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்ததால் ஆத்திரமுற்ற ஜெயபால் மது பாட்டிலை உடைத்து குத்தி உள்ளார். காயமடைந்த செல்லத்தாயி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஜெயபால் கைது செய்யப்பட்டார்.