ADDED : ஜன 01, 2024 05:42 AM
பாலத்தில் விழுந்து காயம்
மதுரை: காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் 58. நேற்று காலை பாண்டிகோயில் செல்லும் போது விரகனுார் அருகே பாலத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்து சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை மீட்டபோது, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம், விலை உயர்ந்த அலைபேசி, வாட்ச் ஆகிவற்றை 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஹரிவிக்னேஷ், இ.எம்.டி., தேன்மொழி ஆகியோர் மகன் தினேஷிடம் ஒப்படைத்தனர். முருகானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவர் கைது
மதுரை: உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அபிேஷக் 23, விராட்டிப்பத்து ராஜாகுரு 22, ஆகியோர் ஐயப்பன் கோயில் காளவாசல் பகுதியில் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ரத்தினவேலு தலைமையில் சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து 2.300 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவர்கள் பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
லாட்டரி விற்றவர் கைது
கொட்டாம்பட்டி: எஸ்.ஐ. அண்ணாத்துரை கருங்காலக்குடி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது லாட்டரி விற்ற சதீஷ்ராஜாவை 30, கைது செய்து ரூ.7,330, லாட்டரி சீட்டுக்கள் மற்றும் டூ வீலரை பறிமுதல் செய்தார்.
தொழிலாளி பலி
மதுரை: காமராஜர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 43. கட்டடத் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ராமேஸ்வரம் -திருப்பதி செல்லும் ரயில் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
எலக்ட்ரீசியன் பலி
திருமங்கலம்: காமராஜர்புரம் வடபகுதியை சேர்ந்தவர் நாகராஜ். புதுவீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் உள்ள மின்மோட்டாரை கீழத் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் தாரிக் 20, நேற்று பழுது பார்த்தார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.