ADDED : ஜன 03, 2024 06:36 AM
திருமங்கலம்: திருமங்கலம் பயோனியர் காலனி குடியிருப்பில் குழந்தைகளுக்கான பூங்கா போன்றவை ஆக்கிரமிப்புகளால் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
ஆட்டோக்கள், மினி வேன்கள் ஆக்கிரமித்துள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். தெருவிற்கு செல்லும் பாதையில் மதுக்கடை உள்ளதால் குடிமகன்களின் தொந்தரவால் பெண்கள் அச்சப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு, மதுக்கடையை அகற்றகோரி ஆர்.டி.ஓ., தாசில்தார், நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.