/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு கச்சிராயன்பட்டி புதுார் மக்கள் கதறல் குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு கச்சிராயன்பட்டி புதுார் மக்கள் கதறல்
குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு கச்சிராயன்பட்டி புதுார் மக்கள் கதறல்
குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு கச்சிராயன்பட்டி புதுார் மக்கள் கதறல்
குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்ப்பு கச்சிராயன்பட்டி புதுார் மக்கள் கதறல்
ADDED : செப் 26, 2025 04:44 AM

கொட்டாம்பட்டி: கே.புதுாரில் செயல்படும் குவாரியில் வெடி வைத்து தகர்ப்பதால் கிராம மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையில் இருந்து கச்சிராயன்பட்டி புதுார் செல்லும் மூன்று பாதைகளும் ரோட்டோரமுள்ள கருப்பாயி ஊருணி உடைகல் குவாரியை கடந்து செல்கின்றன. குவாரியில் பாறைகளை தகர்க்க அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். குவாரி விதிமுறையை பின்பற்றாததால் அருகில் குடியிருப்போர் பாதிப்பதாக கூறுகின்றனர். எனவே நேற்று கிராம மக்கள் குவாரி முன் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், குமாரி, ஆர்.ஐ., இக்பால் சமரசம் செய்தனர்.
பெரியநாச்சி கூறியதாவது: ஆறு மாதங்களாக இரவு, பகலாக வெடி வைத்து பாறைகளை தகர்க்கின்றனர். இதில் மூன்று கர்ப்பிணிகளின் கர்ப்பம் கலைந்துள்ளது. வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வெடி வைக்கும் போது கற்கள் பறந்து வாகனம், நடந்து செல்வோர் மீது விழுவதால் காயமேற்படுகிறது.
பள்ளி வேன் மீது கற்கள் விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். குவாரி அருகே நெல் களத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைக்கின்றனர். அதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து குவாரி விதிமீறலை தடுக்க வேண்டும் என்றார்.
குவாரி ஒப்பந்ததாரர் ஆடுதுறை கூறுகையில், ''குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. பாறையை விறகு வைத்து எரித்து தான் உடைக்கிறோம். தேவைப்படும் போது மட்டும் குறைந்த வீரியமுள்ள வெடிகளை பயன்படுத்துகிறோம். மக்கள் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்'' என்றார்.
ஆர்.ஐ., இக்பால் கூறுகையில், ''பொது மக்களின் புகார்கள் குறித்து அறிக்கையாக தாசில்தார் மூலம் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றார்.