/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரோந்து போலீஸ் 'ஆப்சென்ட்' சமூகவிரோதிகள் 'பிரசன்ட்' தவிக்கிறது தாசில்தார் நகர் ரோந்து போலீஸ் 'ஆப்சென்ட்' சமூகவிரோதிகள் 'பிரசன்ட்' தவிக்கிறது தாசில்தார் நகர்
ரோந்து போலீஸ் 'ஆப்சென்ட்' சமூகவிரோதிகள் 'பிரசன்ட்' தவிக்கிறது தாசில்தார் நகர்
ரோந்து போலீஸ் 'ஆப்சென்ட்' சமூகவிரோதிகள் 'பிரசன்ட்' தவிக்கிறது தாசில்தார் நகர்
ரோந்து போலீஸ் 'ஆப்சென்ட்' சமூகவிரோதிகள் 'பிரசன்ட்' தவிக்கிறது தாசில்தார் நகர்
ADDED : செப் 22, 2025 03:34 AM

மதுரை : மதுரை மாநகராட்சி 37 வது வார்டில் தாசில்தார் நகர் கல்லுாரி வீதி உள்ளது. இங்குள்ள 5 தெருக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு சமூக விரோதிகளின் அட்டகாசத்தாலும், சரியான ரோடு வசதி இல்லாமலும் மக்கள் தவிக்கின்றனர்.
மோசமான ரோடு இப்பகுதி மேம்பாட்டுக்காக போராடும் குடியிருப்போர் சங்கத் தலைவர் மாறன், செயலாளர் பொன்னையா, பொருளாளர் வரதராஜன், துணைத் தலைவர் கதிரேசன், துணைச் செயலாளர் சேகர்பாபு, செயற்குழு உறுப்பினர்கள் பீர்முகம்மது, அருண், பிரேம்குமார், சீனிவாசன், பஞ்சம்மாள், ஜெயபாப்பு கூறியதாவது:
எங்கள் பகுதியில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். கல்லுாரி வீதி மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்துக்குள்ளாகின்றனர். மழை நேரங்களில் சேறும், சகதியுமாக குளம் போல் நீர் சூழ்ந்து விடும். ஆக்கிரமிப்பால் 20 அடி ரோடு சுருங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.அருகில் கல்லுாரி இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறுகலான வளைவில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், குப்பை வண்டிகள் குறுகிய வளைவில் செல்ல முடியவில்லை. சித்தி விநாயகர் கோயில் தெரு, நெல்லை வீதி, தார் ரோட்டில் அமைக்க வேண்டும்.
பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் அமைத்த 3 இன்ச் பைப் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மாதம் 3 முறை சாக்கடை பொங்கி வழியும் அவலம் நிலவுகிறது. வாரத்தில் 2 நாள் கூட குப்பை அள்ள வராததால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. குப்பைத்தொட்டியும் இல்லை.
அச்சுறுத்தும் சமூக விரோதிகள் இங்குள்ள மின்விளக்குகள் செயல்படாமலும், போதுமான வெளிச்சம் இல்லாமலும் உள்ளன. திருட்டு பயத்தில் மக்கள் வாழ்கின்றனர். செயின் பறிப்பு நடந்துள்ளதால் கண்காணிப்பு கேமரா அவசியம் தேவை. போலீசார் ரோந்து வருவதில்லை என்பதால், சமூகவிரோதிகள் நடமாட்டம் உள்ளது. அவர்கள் அருகே உள்ள கல்லுாரி மாணவியர் விடுதியை அடிக்கடி நோட்டமிடுவதால் பெண்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.
தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. கும்பலாக சேர்ந்து துரத்துகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.