டாக்டர் பற்றாக்குறை நோயாளிகள் அவதி
டாக்டர் பற்றாக்குறை நோயாளிகள் அவதி
டாக்டர் பற்றாக்குறை நோயாளிகள் அவதி
ADDED : செப் 15, 2025 04:29 AM
பேரையூர் : பேரையூர் அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை, மகப்பேறு மருத்துவர் இல்லாததால் நோயாளிகளை மதுரை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர்.
பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நடக்கும் விபத்துகளுக்கு பேரையூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் உள்ளது. ஆனால் விபத்துகளில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க இங்கு எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாத நிலை உள்ளது.
விபத்தில் சிக்குவோருக்கு இங்கு முதலுதவி அளித்தபின், பாதிக்கப் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டி உள்ளது. பிரசவம் பார்க்கவும் மகப்பேறு மருத்துவர் இல்லை. இதனால் மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் கர்ப்பிணிகளும் பாதிக்கப்படுகின்றனர். மகப்பேறு மற்றும் எலும்பு முறிவு மருத்துவர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.