/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோரிக்கைகளை வலியுறுத்துவது தீர்வில்லையெனில் போராடுவது செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு கோரிக்கைகளை வலியுறுத்துவது தீர்வில்லையெனில் போராடுவது செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்துவது தீர்வில்லையெனில் போராடுவது செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்துவது தீர்வில்லையெனில் போராடுவது செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்துவது தீர்வில்லையெனில் போராடுவது செவிலியர் மேம்பாட்டு சங்கம் முடிவு
ADDED : செப் 15, 2025 04:28 AM
மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்புவது, பிரசாரம் செய்வது என்றாலும் தீர்வில்லை எனில் போராட்டம் நடத்துவது என செவிலியர் மேம்பாட்டு சங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சசிகலா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுஜாதா வரவேற்றார். தமிழ்நாடு அரசுஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ், மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநில துணைத் தலைவர் பரமசிவன், பொதுப்பணித்துறை, ஆட்சிப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மருத்துவத் துறையில் ஒப்பந்த முறை, அத்துக்கூலி முறையை ரத்து செய்ய வேண்டும். எம்.ஆர்.பி.,தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைககு சமஊதியம் வழக்கு தீர்ப்பின் மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி செப். 24 முதல் 30 வரை பிரசாரம் செய்வது, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.14ல் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது, முதல்வருக்கு கடிதம் அனுப்புவது, அக்.28ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, தீர்வு இல்லையெனில் ஜனவரி அல்லது பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் செவிலியர்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.