/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை அரசு மருத்துவமனை வார்டில் நோயாளி தற்கொலை மதுரை அரசு மருத்துவமனை வார்டில் நோயாளி தற்கொலை
மதுரை அரசு மருத்துவமனை வார்டில் நோயாளி தற்கொலை
மதுரை அரசு மருத்துவமனை வார்டில் நோயாளி தற்கொலை
மதுரை அரசு மருத்துவமனை வார்டில் நோயாளி தற்கொலை
UPDATED : ஜூலை 19, 2024 05:45 PM
ADDED : ஜூலை 19, 2024 01:54 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசிலம்பட்டி சில்லாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் 62, வார்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் ஏற்கனவே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்ற போது கால் விரல்கள் அகற்றப்பட்டன. மேல் சிகிச்சைக்காக ஜூலை 17ல் மதுரை அரசு மருத்துவமனை 219வது வார்டில் இவர் அனுமதிக்கப்பட்டதாக டீன் தர்மராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நேற்று (ஜூலை 18) அதிகாலை 2:00 மணி வரை செல்வத்தின் மகன் பிரபாகரன் உடனிருந்தார். மற்ற நோயாளிகள் துாங்க விளக்கை அணைத்த நேரத்தில் பிரபாகரன் துாங்கி கொண்டிருந்தார். வார்டின் அருகே உள்ள கதவில்லாத மருந்து கட்டும் அறைக்கு (டிரஸ்ஸிங் ரூம்) சென்ற செல்வம், ஜன்னலில் பெட்சீட்டை கட்டி துாக்கிட்டு இறந்தார். நர்ஸ்கள் மருந்து கட்டும் அறைக்கு சென்ற போது செல்வம் இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.