Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்

மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்

மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்

மதுரையில் 'தொட்டு' தொடரும் 'ஸ்பா' விபச்சாரம்: வாடிக்கையாளர்களை 'வளைக்கும்' சுவராஸ்யம்

ADDED : ஜூலை 19, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரையில் 'ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தும் சிலர், சட்டவிரோதமாக பாலியல் தொழிலும் செய்து வருவது அதிகரித்துள்ளது. 'ஸ்பா' சென்டருக்கான அனுமதி கடிதத்தை போலியாக தயாரித்தும், வேறு ஒருவர் அனுமதி பெற்றதைதங்கள் சென்டருக்கும் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மதுரை கே.கே.நகர் லேக்வியூ ரோடு பகுதியில் 'துலாஸ்' ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. துணைகமிஷனர் குமார், உதவிகமிஷனர் வினோதினி, ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் ேஹமமாலா தலைமையிலான போலீசார் நேற்று மதியம் சோதனையிட்டனர். விபச்சாரம் நடப்பது உறுதியானது.

மேலாளர் கோவை சரவணகுமார் 42, உட்பட இருவரை கைது செய்தனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர். மதுரை வண்டியூர் தீபன் என்பவர் பெயரில் பெறப்பட்ட அனுமதியை அருண்குமார் என்பவர் இந்த 'ஸ்பா'வுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். அவரை தேடி வருகின்றனர்.

'ஸ்பா' சென்டர்கள் பின்னணி


'மசாஜ் செய்வதும் தொழில்தான். எனவே உரிய நிபந்தனைகளுடன் 'ஸ்பா' சென்டர் நடத்தலாம்' என வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 50 'ஸ்பா' சென்டர்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ளன.

இதில் முறையாக அனுமதி பெற்றவை 7 மட்டுமே. மற்றவை போலி அனுமதி கடிதங்களுடன் நடத்தப்படுபவை. அதேபோல் மசாஜ் செய்பவர்கள் அதற்கான பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது கோர்ட் உத்தரவு. ஆனால் மதுரையில் மசாஜ் செய்யும் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்களில் பலருக்கு 'ஸ்பா' சென்டர் உரிமையாளர்கள் போலியாக சான்று தயாரித்து கொடுத்து தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.

வாடிக்கையாளர்களை 'வளைப்பது' எப்படி


'ஸ்பா' சென்டருக்கான வெப்சைட், சமூகவலைத்தளத்தில் வரும் விளம்பரங்களில் இருந்து ஒருவர் தேடும்போது, அவரது அலைபேசி எண் சம்பந்தப்பட்ட சென்டரில் பதிவாகிவிடும். அங்கிருந்து பேசுபவர், என்னென்ன மசாஜ் எல்லாம் செய்வோம் எனக்கூறி கட்டண விபரத்தை தெரிவிப்பார். 'அது உண்டா' எனக்கேட்டால் 'கிடையாது' என தெரிவித்துவிடுவர்.

'போய்தான் பார்ப்போமே' என முதல் நாளில் புதுவாடிக்கையாளராக செல்லும்போது மசாஜ் மட்டுமே செய்து அனுப்பிவிடுவர். மறுமுறை அதே சென்டருக்கு செல்லும்போது, ஏற்கனவே வந்தவரா என உறுதிசெய்ய போன் எண் கேட்பர்.

அந்த எண்ணை கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போது ஏற்கனவே வந்தவர் என காண்பித்தால், மசாஜ் செய்யும் பெண்களுக்கு வரவேற்பு அறையில் இருப்பவர் 'சிக்னல்' கொடுத்துவிடுவர். அறைக்கு செல்லும் போதும், 'மசாஜ் முடித்தபிறகு 'எக்ஸ்ட்ரா' வேணுமா' என பாலியல் தொழிலுக்கான சங்கேத வார்த்தைகளை பெண் கூறுவார்.

சம்மதம் தெரிவித்தால் அந்த அறையிலேயே பாலியல் தொழில் நடந்துவிடும். அதற்குரிய 'எக்ஸ்ட்ரா' கட்டணத்தை பெண்ணுக்கு 'டிப்ஸ்' ஆக வாடிக்கையாளர் தந்துவிடுவர்.

இதில் ஈடுபட்டுள்ள மதுரை பெண்களில் சிலர் ஏற்கனவே தனி வீடு, ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதானவர்கள்.

தற்போது இவர்கள் போலி சான்று பெற்று 'மசாஜ்' தொழில் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

'புது பீஸ் வந்திருக்கு'


மசாஜ் செய்யும் பெண்கள் தொடர்ந்து ஒரே சென்டரில் 'பணிபுரிய' உரிமையாளர்கள் விரும்புவதில்லை. மதுரையில் உள்ள அனைத்து 'ஸ்பா' சென்டர்களுக்கும் சுழற்சி முறையில் அனுப்பப்படுகிறார்கள். இதற்காகவே 'வாட்ஸ் அப்' குரூப் உள்ளது. பெண்களில் சிலரது போட்டோக்களை 'வாட்ஸ் அப்'பில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி 'புது பீஸ் வந்திருக்கு' என சென்டர் மேலாளர்கள் அழைக்கிறார்கள்.

தொழில் 'டல்' அடிக்கும்போது சலுகை என்ற பெயரில் பழைய கட்டணத்தில் மசாஜ் செய்யும் நேரத்தை கூடுதலாக அரைமணி நேரம் நீட்டித்து அழைப்பு விடுக்கிறார்கள். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில் சிலர் 'பியூட்டி பார்லரில் வேலை பார்க்கிறேன்' என்று குடும்பத்தினரிடம் கூறி வந்து செல்கின்றனர். குடும்ப வறுமை, கடன் பிரச்னை போன்ற காரணங்களால் இத்தொழிலில் ஈடுபடுவதாக போலீசாரிடம் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இருட்டறையில் மசாஜ்


போலீசார் கூறியதாவது: ஐகோர்ட் நிபந்தனைபடி எந்த சென்டரும் முறையாக நடத்தப்படுவதில்லை. ஸ்பா அண்ட் சலுான் என்ற பெயரில் கூட சில இடங்களில் விபச்சாரம் நடக்கிறது. வாடிக்கையாளர் விபரங்களை பதிவேடுகளில் பராமரிப்பதில்லை.

மசாஜ் செய்யும் அறை இருட்டாக இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால் இருட்டறையில்தான் செய்கிறார்கள். பயிற்சி பெற்றவர்கள் என்று போலி சான்றுடன் கை, கால்களை அமுக்கி விட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். தொடரும் இத்தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us