Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வெள்ளை 'ஈ'க்களை அழிக்க ஒட்டுண்ணி விவசாயிகள் கோரிக்கை

வெள்ளை 'ஈ'க்களை அழிக்க ஒட்டுண்ணி விவசாயிகள் கோரிக்கை

வெள்ளை 'ஈ'க்களை அழிக்க ஒட்டுண்ணி விவசாயிகள் கோரிக்கை

வெள்ளை 'ஈ'க்களை அழிக்க ஒட்டுண்ணி விவசாயிகள் கோரிக்கை

ADDED : மே 31, 2025 05:01 AM


Google News
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்( நிலம்) கோபால், தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய தேவைகள் குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற்றனர். பெரிய அருவி நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பால் நீரை தேக்க முடியவில்லை. நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய், சிங்கம்புணரி, பூதமங்கலம் கால்வாய்களை மராமத்து பார்க்க வேண்டும். தென்னை மரத்தில் வெள்ளை ஈக்களை அழிக்க விவசாயிகளுக்கு ஒட்டுண்ணி வழங்கவும், சர்க்கரை ஆலையை துவங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாதவூர் பகுதி குளத்தை வருவாய்த்துறை ஆவணத்தில் நிலமாக மாற்றப்பட்டுள்ள தவறை சரி செய்ய வேண்டும். புதுசுக்காம்பட்டி சிறுமேளம் கண்மாயில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதோடு கரையை பலப்படுத்த வேண்டும். கொட்டாம்பட்டியில் தென்னை நாற்று பண்ணை துவங்க வேண்டும் என்றனர்.விவசாயிகள் பழனிச்சாமி, மணி, கிருஷ்ணன், அருண், பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us