ADDED : மே 31, 2025 05:01 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணைத் தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தனர்.
திருமங்கலம் நகர்ப்புற பகுதியில் ரூ. 8.16 கோடியில் 5 இடங்களில் தார் ரோடு அமைத்தல், ரூ. 5.74 கோடி மதிப்பில் 3 இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் வேலைகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இன்ஜினியர் ரத்தினவேலு, கவுன்சிலர்கள் வீரக்குமார், சின்னசாமி, அலுவலர்கள் பங்கேற்றனர். இம்முறையும் நகராட்சி தலைவர் அறையில் இக்கூட்டம் நடந்தது.