/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் கொள்முதல் நிறுத்தம் 2 ஆயிரம் மூடைகள் தேக்கம் நெல் கொள்முதல் நிறுத்தம் 2 ஆயிரம் மூடைகள் தேக்கம்
நெல் கொள்முதல் நிறுத்தம் 2 ஆயிரம் மூடைகள் தேக்கம்
நெல் கொள்முதல் நிறுத்தம் 2 ஆயிரம் மூடைகள் தேக்கம்
நெல் கொள்முதல் நிறுத்தம் 2 ஆயிரம் மூடைகள் தேக்கம்
ADDED : செப் 03, 2025 05:47 AM

மேலுா : அட்டப்பட்டியில் நெல் கொள்முதலை அதிகாரிகள் நிறுத்தி வைத்து, பத்து நாட்களாவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கீழையூர், கீழவளவு உள்பட பல கிராமங்களில் கோடை சாகுபடியில் விளைவித்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அட்டப்பட்டியில் அமைத்த மையத்தில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூடைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
விவசாயி பாண்டி குமார் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து விளைவித்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது.
அதிகாரிகள் நிலத்திற்குரிய அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர். இருப்பினும் ஏனோ நெல்லை கொள்முதல் செய்யாமல் நிறுத்தி உள்ளனர்.
கொள்முதல் அதிகாரியிடம் கேட்டதற்கு, 'ஏற்கனவே கிலோ ரூ. 24.50 கொள்முதல் செய்த நெல்லை கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தி கொள்முதல் செய்ய புதிய உத்தரவு வந்த பிறகு கொள்முதல் செய்யப்படும்' என்கிறார்.
பத்து நாட்களாக மழையில், நனைந்தும் வெயிலில் காய்ந்தும் நெல் வீணாகிறது.
இரவு, பகலாக நெல்லை காவல் காப்பதால் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம்.
மாவட்ட நிர்வாகம் உடனே நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சரவணன் கூறுகையில், செப். 1 முதல் கொள்முதல் செய்யப்படும் என்றார்.