/உள்ளூர் செய்திகள்/மதுரை/எம்.டெக் மாணவர் கொலை: ஐ.டி.ஐ., மாணவர் கைது பின்னணி என்னஎம்.டெக் மாணவர் கொலை: ஐ.டி.ஐ., மாணவர் கைது பின்னணி என்ன
எம்.டெக் மாணவர் கொலை: ஐ.டி.ஐ., மாணவர் கைது பின்னணி என்ன
எம்.டெக் மாணவர் கொலை: ஐ.டி.ஐ., மாணவர் கைது பின்னணி என்ன
எம்.டெக் மாணவர் கொலை: ஐ.டி.ஐ., மாணவர் கைது பின்னணி என்ன
ADDED : பிப் 06, 2024 07:28 AM
ஒத்தக்கடை : மதுரையில் எம்.டெக்., மாணவர் கொலையில் ஐ.டி.ஐ., மாணவர் ஜெயசீலன் 19, கைது செய்யப்பட்டார்.
கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பவாத் 25. தனியார் கல்லுாரி எம்.டெக் மாணவர். ஜன.,28ல் மாயமானார். ஒத்தக்கடை போலீசார் தேடினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆத்திகுளம் ஜெயசீலனிடம் 19, விசாரித்தபோது பைசல் அப்துல்லா பவாத்தை கொலை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: ஜெயசீலன் தனியார் ஐ.டி.ஐ., மாணவர். இருவரும் 'நட்பாக' பழகிய போது அதை அப்துல்லா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். அதை காட்டி அவ்வப்போது தொடர்பில் இருந்துள்ளார். ஜெயசீலன் வரமறுத்தபோது வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட போவதாக மிரட்டினார்.
இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு ஜன., 28 காலையில் அழகர்கோவில் அருகே மாங்குளம் மலையடிவார பகுதிக்கு அழைத்து சென்று கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார் என்றனர்.