/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கைஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
ADDED : ஜன 08, 2024 05:59 AM

மதுரை : அலங்காநல்லுாரில் அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை அரசியலாக்க வேண்டாம் என தி.மு.க., அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் திருப்பாலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடத்த கட்டப்பட்டு வரும் ஸ்டேடியம் உலக அளவில் பேசப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் ஏற்பாடு செய்கிறார்.
அவர் 'தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தனி ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது' என பெருமையாக பேசியுள்ளார். ஆனால் இங்கே சிலர் வேண்டுமென்றே ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை அரசியலாக்குகின்றனர். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு பெருமை உலகெங்கும் தெரியும் வகையில்தான் இந்த ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அப்போது ஒதுங்கி நின்றவர்கள் இப்போது அரசியலாக்க கூடாது.
ஜன. 23ல் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் கேட்டுள்ளோம். அவர் அனுமதித்தவுடன் திறக்கப்படும், என்றார். மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன் பங்கேற்றனர்.