/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பத்து தொகுதிகளும் எங்களுக்கே அமைச்சர் மூர்த்தி சபதம் பத்து தொகுதிகளும் எங்களுக்கே அமைச்சர் மூர்த்தி சபதம்
பத்து தொகுதிகளும் எங்களுக்கே அமைச்சர் மூர்த்தி சபதம்
பத்து தொகுதிகளும் எங்களுக்கே அமைச்சர் மூர்த்தி சபதம்
பத்து தொகுதிகளும் எங்களுக்கே அமைச்சர் மூர்த்தி சபதம்
ADDED : செப் 22, 2025 03:38 AM
பாலமேடு : 'மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் வெல்ல பாடுபடுவோம்' என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
பாலமேட்டில் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு பொது கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
முன்னாள் மத்திய நிதி இணை அமைச்சர் பழனிமாணிக்கம் கூட்ட உறுதிமொழி ஏற்புடன் துவக்கி வைத்து பேசினார். பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, சுமதி, ஒன்றிய, நகர செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், அருண்,பரந்தாமன், ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், மாவட்ட, ஒன்றிய, நகர அணி அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: நாலரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 2026ல் இந்த நல்லாட்சி தொடர 7வது முறையாக தி.மு.க., ஆட்சி, 2வது முறை முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார். மதுரையில் உள்ள 10 தொகுதிகளையும் வெல்வோம், அதற்கு தீவிரமாக பாடுபடுவோம் என்றார்.