Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/செப்., 25ல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும்... ஆனா நடக்காது... ; மேயர் மீது அதிருப்தியை காட்ட தி.மு.க., திட்டம்

செப்., 25ல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும்... ஆனா நடக்காது... ; மேயர் மீது அதிருப்தியை காட்ட தி.மு.க., திட்டம்

செப்., 25ல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும்... ஆனா நடக்காது... ; மேயர் மீது அதிருப்தியை காட்ட தி.மு.க., திட்டம்

செப்., 25ல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும்... ஆனா நடக்காது... ; மேயர் மீது அதிருப்தியை காட்ட தி.மு.க., திட்டம்

UPDATED : செப் 22, 2025 05:26 AMADDED : செப் 22, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
இம்மாதம் கவுன்சிலர்கள் கூட்டம் செப்.,25ல் நடக்கவுள்ளது. வழக்கமாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்க வேண்டிய கேள்விகளை மேயருக்கு கடிதமாக முன்கூட்டியே எழுதிக்கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஒருவர் கூட நேற்றுவரை கேள்விகள் எழுதிக்கொடுக்கவில்லை.

மண்டல தலைவர்கள், சில நிலைக் குழுத் தலைவர்கள் இல்லாமல் ஆகஸ்ட் மாத கூட்டம் நடந்தது. சொத்துவரி முறைகேட்டில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில் மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க., கவுன்சிலர்களும் அக்கூட்டத்தை புறக்கணித்தனர். ஒரு மணிநேரத்தில் கூட்டமும் முடிந்தது.

ஆக., மாதம் போல் மீண்டும் ஏனோ தானோ என கவுன்சிலர்கள் கூட்டம் நடக்க வேண்டாம். சொத்துவரி முறைகேடு விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை இல்லை. பாரபட்ச நடவடிக்கையை தலைமைக்கு உணர்த்தும் வகையில் தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிக்கவே இதுவரை கேள்விகள் எழுதிக் கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத தி.மு.க.,கவுன்சிலர்கள் கூறியதாவது: தமிழகத்தையே உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் 5 மண்டல, 2 நிலைக் குழு தலைவர்கள் பதவியை இழந்துள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் முறைகேடு நடந்தது 3வது மண்டலத்தில் தான். கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததும் மேயர் கணவர், மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்டவர்கள் மீது தான். பதவியிழந்த பிற 4 மண்டல தலைவர்களை கைதானவர்கள் யாரும் இதுவரை வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக தகவல் இல்லை. ஆனால் அவர்கள் பதவியை இழந்துள்ளனர்.

அதேநேரம் மேயர் கணவர் பொன்வசந்த் கைதாகி சிறையில் உள்ளார். ஆனால் இதுகுறித்து மேயரிடம் விசாரணை கூட நடத்தவில்லை. அவருக்கு அமைச்சர் பின்புலமாக உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும் மண்டல தலைவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டு உடன் ரத்து செய்யப்பட்டுள்ளதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி முறைகேடு விஷயத்தில் தி.மு.க., தலைமை உண்மை நிலையை அறியவில்லை. இதை தலைமைக்கு உணர்த்தும் வகையில் வரும் கூட்டத்தை பலரும் புறக்கணிக்க உள்ளோம். இதனால் தான் கேள்விகள் எழுதிக்கொடுக்கவில்லை.

இன்று (செப்.,22) துணை முதல்வர் உதயநிதி மதுரை வருகிறார். அவர் முன்னிலையில் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரச்னையை கொண்டுசெல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். எனவே இம்மாதம் கூட்டம் நடக்குமா நடக்காதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us