/உள்ளூர் செய்திகள்/மதுரை/மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் மேலத்திருமாணிக்கத்தில் பக்தர்கள் பரவசம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் மேலத்திருமாணிக்கத்தில் பக்தர்கள் பரவசம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் மேலத்திருமாணிக்கத்தில் பக்தர்கள் பரவசம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் மேலத்திருமாணிக்கத்தில் பக்தர்கள் பரவசம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் மேலத்திருமாணிக்கத்தில் பக்தர்கள் பரவசம்
ADDED : ஜன 22, 2024 05:29 AM

எழுமலை: எழுமலை அருகே மேலத்திருமாணிக்கத்தில் பாண்டியர்கள் காலத்துக்கு முற்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர், அமச்சியார் அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஜன.19 காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி யாகசாலை பிரவேசம், முதலாம் கால பூஜைகள் நடந்தன. ஜன.20 ல், இரண்டாம், மூன்றாவது கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை, பூர்ணாஹூதி நிறைவுற்று கடம் புறப்பாடு காலை 7:05 மணிக்கு நடந்தது.
தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும், காலை 8:05 மணிக்கு அமச்சியார் அம்மன் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள் செய்து அன்னதானம் வழங்கினர். பூஜைகளை அர்ச்சகர் அசோக் ஆனந்த கிரிசிவம், ஓதுவார் அழகுசொக்கு மற்றும் பணியாளர்கள் செய்தனர். செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், தக்கார் சக்கரையம்மாள், உபயதாரர் ஆச்சி காசிமாயன், எழுமலை பாரதியார் பள்ளி தாளாளர் பொன்கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலுார்
பழைய ஒக்கப்பட்டியில் மாரியம்மன் மற்றும் மந்தை கருப்புசுவாமி கோயில், நாயத்தான்பட்டியில் பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு ஜன.20 முதல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்காம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


