ADDED : ஜன 28, 2024 04:23 AM
வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் அம்பலத்தாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உதவி இயக்குநர் பழனிவேல் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்தவர்களுக்கு பரிசு வழங்கினார்.
உதவி டாக்டர்கள் முனியாண்டி, ஆறுமுகம், சிந்து தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் முருகையன், உதவியாளர்கள் வாசு, ஜெயதேவி ஆகியோர் பசுக்களுக்கு கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.