ADDED : ஜன 30, 2024 10:47 PM

மதுரை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் முதல்நிலை பெண் போலீஸ் திவ்யா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
பெண்கள் பிரிவில் 100க்கு 83 மதிப்பெண்கள் எடுத்து எஸ்.ஐ.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடன் மொத்தம் 123 பேர் எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.