ADDED : ஜூன் 12, 2025 02:18 AM

மதுரை: மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி தன்யாஸ்ரீ, தேசிய பெண்கள் கூடைப்பந்து போட்டிக்கு சென்னை அணிக்கு தேர்வு பெற்றார்.
தமிழகம், புதுச்சேரி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவிகளில் தன்யாஸ்ரீ, 17 வயது பெண்கள் பிரிவில் தேசிய அளவில் விளையாடுவதற்கான தமிழக அணியில் (சென்னை ரீஜன்) பங்கேற்க தேர்வு பெற்றார். தேசிய போட்டி வரும் ஆகஸ்டில் லக்னோ, கான்பூரில் நடக்கிறது. மாணவியை முதல்வர் மனோஜ்குமார் பாலிவல், உடற்கல்வி ஆசிரியர் மலைச்சாமி, பயிற்சியாளர் பிரபகாரன் பாராட்டினர்.