மேலுார் பகுதியில் 194 தேவாங்குகள்
மேலுார் பகுதியில் 194 தேவாங்குகள்
மேலுார் பகுதியில் 194 தேவாங்குகள்
ADDED : ஜூன் 12, 2025 02:19 AM

மேலுார்: மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுகலை விலங்கியல் துறை மாணவர் ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல். இவர் 4 மாதங்களாக அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, சேக்கி பட்டி பகுதியில் காணப்படும் சாம்பல் நிற தேவாங்குகள் குறித்தும் அவை எதிர்கொள்ளும் வாழ்விட சவால் குறித்தும் கள ஆய்வு செய்தார். இதன் அறிக்கையை கல்லுாரி மூலம் வனத்துறைக்கு சமர்ப்பிக்க உள்ளார்.
அவர் கூறியதாவது: தேவாங்கு குடும்பத்தில் சாம்பல், வங்காள தேவாங்கு என இரு வகை உள்ளது. ஆய்வில் 194 சாம்பல் வகை தேவாங்குகள் காணப்பட்டன. இதில் கேசம்பட்டி கிராமத்தில் 111, கம்பூர், சேக்கிபட்டியில் 83 தேவாங்குகள் உள்ளன. இப்பகுதியில் தேவாங்குகள் சாலை விபத்தில் இறப்பதால் சாலையின் இரு பகுதியில் உள்ள மரங்களில் ஏணி வடிவிலான பாலம் அமைக்கலாம்.
மேலும் தேவாங்குகள் சாலையைக் கடக்கும் பகுதி என்ற எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். தேவாங்கு அடர்த்தியாக வாழும் பகுதிகளை கண்டறிந்து அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அல்லது பல்லுயிர் மண்டலமாக அறிவிக்க கோரி வனத்துறைக்கு கோரிக்கை வைக்க உள்ளேன் என்றார்.