/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'மதுரை வாசிக்கிறது' விழிப்புணர்வு நிகழ்ச்சி 'மதுரை வாசிக்கிறது' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'மதுரை வாசிக்கிறது' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'மதுரை வாசிக்கிறது' விழிப்புணர்வு நிகழ்ச்சி
'மதுரை வாசிக்கிறது' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 02, 2025 03:32 AM
மதுரை : மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 'பபாசி' அமைப்புடன் இணைந்து தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா செப். 5ல் துவங்க உள்ளது. இதையொட்டி 'மதுரை வாசிக்கிறது' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதுரை எழுத்தாணிக்கார தெருவில், கல்லுாரி மாணவர்கள் பலநுாறு பேர் இதில் பங்கேற்றனர்.
வெங்கடேசன் எம்.பி., தலைமை வகித்தார். இதில் கலெக்டர் பிரவீன்குமார் பேசுகையில், 'இன்று அலைபேசி பயன்பாட்டுக்கு அடிமையாகிவிட்டோம்.
நம் பெற்றோர் காலத்தில் வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதில்லை.
புத்தகம் வாசிப்பது வாழ்வில் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய ஒன்று. உங்கள் பெற்றோர், நண்பர்களின் பிறந்தநாட்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், டி.ஆர்.ஓ., சக்திவேல், கவுன்சிலர் பானு உட்பட பலர் பங்கேற்றனர்.