/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., முப்பெரும் விழாவிலும்மதுரை கவுன்சிலர்களுக்கு சோதனை மீண்டும் பொதுக்குழு 'பஞ்சாயத்து' தி.மு.க., முப்பெரும் விழாவிலும்மதுரை கவுன்சிலர்களுக்கு சோதனை மீண்டும் பொதுக்குழு 'பஞ்சாயத்து'
தி.மு.க., முப்பெரும் விழாவிலும்மதுரை கவுன்சிலர்களுக்கு சோதனை மீண்டும் பொதுக்குழு 'பஞ்சாயத்து'
தி.மு.க., முப்பெரும் விழாவிலும்மதுரை கவுன்சிலர்களுக்கு சோதனை மீண்டும் பொதுக்குழு 'பஞ்சாயத்து'
தி.மு.க., முப்பெரும் விழாவிலும்மதுரை கவுன்சிலர்களுக்கு சோதனை மீண்டும் பொதுக்குழு 'பஞ்சாயத்து'
ADDED : செப் 12, 2025 05:04 AM
மதுரை: மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நாளில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியது போல் கரூரில் தி.மு.க., முப்பெரும் விழா நடக்கும் நாளில் மாநகராட்சி மண்டலக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரையில் ஜூன் 1ல் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதே நாளில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார்.
சில வட்டம், பகுதி செயலாளர்கள் கவுன்சிலர்களாக இருப்பதால் எந்தக் கூட்டத்தில் பங்கேற்பது என சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக கட்சியில் இருந்து மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், செப்.,17ல் கரூரில் தி.மு.க.,வின் முப்பெரும் விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதற்காக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை அழைத்துவர அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அதேநாளில் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4ன் கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுன்சிலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டல தலைவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் 4 மாதங்களாக மண்டல கூட்டங்கள் நடக்கவில்லை.
இந்நிலையில், ஆக.29 ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'மண்டல தலைவர்கள் இல்லாமல் மண்டலக் கூட்டங்கள் நடத்தலாம்' என அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி செப்.,17 ல் இரண்டு மண்டலங்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரையில் தி.மு.க., பொதுக்குழு நடந்தபோது அதே நாளில் கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் நடத்தியது சர்ச்சையானது. கட்சி தலைமையும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் மதுரை தி.மு.க., கவுன்சிலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டங்களை மண்டல தலைவர்கள் தான் முடிவு செய்வர். அவர்கள் இல்லாத நிலையில் இக்கூட்டங்களை நடத்த யார் முடிவு செய்தது. கூட்டம் நடத்துவது தொடர்பாக உதவி கமிஷனர்கள் மேயருக்கு தபால் அனுப்பியுள்ளனர்.
ஆளுங்கட்சி நிகழ்ச்சி ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆலோசிக்காமல் மண்டல கூட்டம் தேதியை முடிவு செய்யலாமா. கூட்டம் தேதியை மாற்ற வேண்டும். இல்லையென்றால் முறைப்படி மீண்டும் தலைமைக்கு புகார் அளிக்கப்படும் என்றனர்.