ADDED : செப் 12, 2025 05:03 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர் கான்டினென்டல் பள்ளி தேசிய நிதிக் கல்வி மையம் வழங்கும் 'மணி ஸ்மார்ட் ஸ்கூல்' விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, 'செபி' , காப்பீட்டு துறை ஒழுங்குமுறை வாரியம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வாரியத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய நிதி கல்வி மையம் 'மணி ஸ்மார்ட் ஸ்கூல்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு பண மேலாண்மை, சேமிப்பு, வங்கி, முதலீடு, காப்பீடு, நிதித்திட்டமிடலை எளிமையான முறையில் கற்றுத் தருவதே இதன் நோக்கம்.
நாடு முழுவதும் 14 பள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள இவ்விருதை தமிழ்நாட்டில் கல்வி இன்டர் கான்டினென்டல் பள்ளி மட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த விழாவில் பள்ளித் தலைவர் செந்தில்குமார், மாணவர் தருண் விருதைப் பெற்றனர்.