/உள்ளூர் செய்திகள்/மதுரை/எல்.ஐ.சி., அலுவலர்கள் ஊழியர்கள் வெளிநடப்புஎல்.ஐ.சி., அலுவலர்கள் ஊழியர்கள் வெளிநடப்பு
எல்.ஐ.சி., அலுவலர்கள் ஊழியர்கள் வெளிநடப்பு
எல்.ஐ.சி., அலுவலர்கள் ஊழியர்கள் வெளிநடப்பு
எல்.ஐ.சி., அலுவலர்கள் ஊழியர்கள் வெளிநடப்பு
ADDED : ஜன 11, 2024 03:58 AM
மதுரை : ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி., அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று மதியம் ஒருமணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டு வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முதல்நிலை அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
வளர்ச்சி அதிகாரிகள் சங்க இணைச்செயலாளர் பிரதீப், ஊழியர்கள் சங்க கோட்டத்தலைவர் சுரேஷ்குமார், பொதுச்செயலாளர் ரமேஷ்கண்ணன், ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
எல்.ஐ.சி., அனைத்துநிலை ஊழியர்களுக்குமான ஊதிய உயர்வு 2022 ஆகஸ்ட் முதல் நிலுவையில் உள்ளது. ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மத்திய, மாநில அரசின் மற்ற துறைகளில் புதிய பென்ஷனுக்கான நிர்வாக பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்.ஐ.சி.,யில் 10 சதவீதமாக உள்ளதால் உயர்த்தி வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய தொழில்நுட்பம், சேவை போன்ற விஷயங்களை கையாளும் போது எல்.ஐ.சி., நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் உள்ள 9 கிளைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் வெளிநடப்பில் பங்கேற்றனர்.