/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு வெளியீட்டில் நடுவுல கொஞ்சம் 'ரிசல்ட்'ஐ காணோம்! காத்திருந்த கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் சோதனைமதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு வெளியீட்டில் நடுவுல கொஞ்சம் 'ரிசல்ட்'ஐ காணோம்! காத்திருந்த கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் சோதனை
மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு வெளியீட்டில் நடுவுல கொஞ்சம் 'ரிசல்ட்'ஐ காணோம்! காத்திருந்த கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் சோதனை
மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு வெளியீட்டில் நடுவுல கொஞ்சம் 'ரிசல்ட்'ஐ காணோம்! காத்திருந்த கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் சோதனை
மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு வெளியீட்டில் நடுவுல கொஞ்சம் 'ரிசல்ட்'ஐ காணோம்! காத்திருந்த கல்லுாரி மாணவர்களுக்கு மீண்டும் சோதனை
ADDED : ஜூலை 08, 2024 06:30 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை இணைப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு மாணவர்களின் 2024 ஏப்ரல் தேர்வு முடிவுகளில் 20 சதவீதம் மாணவர்களுக்கு முடிவு தெரியவில்லை. ஏற்கனவே தாமதமாக வெளியான முடிவால் அதிருப்தியில் இருந்த மாணவர்களுக்கு மேலும் சோதனையாக அமைந்துள்ளது.
இப்பல்கலையின் கீழ் 100க்கும் மேற்பட்ட இணைவிப்பு கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் நடந்த ஏப்ரல் பருவத் தேர்வுகளின் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தன்னாட்சி கல்லுாரிகளில் ஏப்ரல் தேர்வுகளின் முடிவு வெளியிடப்பட்டு மதிப்பெண் வழங்கிய நிலையில் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை நடக்கும் நிலையில், பல்கலை இணைவிப்பு கல்லுாரிகளில் தேர்வு முடிவு வெளியாகாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பல்கலை கன்வீனர் கமிட்டியின் தலைவரான கல்லுாரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தேர்வு முடிவை ஜூலை முதல் வாரம் வெளியிட உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கூடுதல் பேராசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகளில் பல்கலை தீவிரம் காட்டியது.
ஜூலை 5ல் பல்கலை இணைவிப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்கலை இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டது. மேலும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான முடிவு ஜூலை 13ல் வெளியிடப்படும் என தேர்வாணையர் தர்மராஜ் அறிவித்தார்.
ஆனால் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் இறுதியாண்டு மாணவர்கள் பலரின் முடிவுகள் விடுபட்டுள்ளன. இதுகுறித்து பல்கலை கவனத்திற்கு கல்லுாரி நிர்வாகங்கள், மாணவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
பல்கலை அலுவலர்கள் கூறியதாவது குறுகிய காலத்திற்குள் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்ற அவசரத்தில் மதிப்பீடு பணிகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இப்பணிகளில் ஆய்வு மாணவர்கள், பி.எட்., கல்லுாரிகளில் பணியாற்றுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், விடைத்தாள்களுக்கு 'டம்மி' எண்கள் வழங்குதல், விடைத்தாள் அடிப்பகுதியை நீக்கம் செய்தல், டேட்டா என்ட்ரி போன்ற பணிகளில் ஈடுபட்டனர். வழக்கமாக இப்பணிகள் மேற்கொள்ளும் பல்கலை அலுவலர்கள் தவிர்க்கப்பட்டனர். இதனால் பலரின் மதிப்பெண்கள் டேட்டா என்ட்ரியில் விடுபட்டுள்ளது.
இனி, தேர்வு முடிவு விடுபட்டவர்கள் பல்கலையில் விண்ணப்பித்து, அவர்களின் விடைத்தாள்களை தேடி, மதிப்பெண்களை தெரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றனர்.
இனி, தேர்வு முடிவு விடுபட்டவர்கள் பல்கலையில் விண்ணப்பித்து, அவர்களின் விடைத்தாள்களை தேடி, மதிப்பெண்களை தெரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
குறுகிய காலத்திற்குள் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்ற அவசரத்தில் மதிப்பீடு பணிகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இப்பணிகளில் ஆய்வு மாணவர்கள், பி.எட்., கல்லுாரிகளில் பணியாற்றுவோர் ஈடுபடுத்தப்பட்டனர்.