
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடங்களை அகற்றி பிணவறை கட்டும் பணி நடக்கிறது.
இதற்கு முன்பகுதியில் இருந்த டீ கடையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே முன்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை சேதப்படுத்திய மர்மநபர்கள், பிணவறை கட்டுமான பகுதியில் தகர கொட்டகை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் செய்துள்ளது.