ADDED : மார் 21, 2025 05:24 AM
மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரியில் அன்னிய மொழிகளுக்கான மையம் சார்பில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.
ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் குடியேற, பணி நிமித்தமாக, படிப்பிற்காக செல்ல விரும்பும் மாணவர்கள், பொதுமக்கள் இம்மொழிகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இது. மார்ச் 24 முதல் ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகள் துவங்குகின்றன.
சர்வதேச அளவிலான சான்றிதழ் பெறும் வகையில் ஐரோப்பிய மொழிகளுக்கான சி.இ.எப்.ஆர்., நிலைகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன. முன்பதிவு அவசியம். விவரங்களுக்கு 98421 09298ல் தொடர்பு கொள்ளலாம்.