/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஹிந்து முன்னணி நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடிஹிந்து முன்னணி நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
ஹிந்து முன்னணி நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
ஹிந்து முன்னணி நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
ஹிந்து முன்னணி நிர்வாகி ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : பிப் 06, 2024 07:49 AM
மதுரை : தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோயிலில் தீபம் ஏற்றும் இடம் அருகே ஜன.,6 ல் சிலர் மது அருந்தினர்.
ரோந்து சென்ற போலீஸ்காரர் தட்டிக்கேட்டார். அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசினர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் உட்பட சிலர் மீது தஞ்சாவூர் டவுன் மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான குபேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.
போலீஸ் ஸ்டேஷனுக்குள் மனுதாரர் தனது ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டுள்ளார் என்பதற்கு ஆதாரமான போட்டோவை காண்பித்து, நீதிபதி அதிருப்தி வெளியிட்டார். ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.