/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூன் 26, 2025 01:25 AM

மேலுார்: மேலுார் 4 வழிச்சாலை சென்டர் மீடியனில் செடிகளை பராமரிக்க ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம், முறையாக பராமரிக்காததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
மதுரை -- திருச்சி நான்கு வழிச்சாலையை பராமரிக்க தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. அரளிச் செடி வளர்ப்பு, விபத்து வாகனங்கள் மீட்பு, பேட்ரோல் வாகனங்களை பராமரிக்கும் ஒப்பந்தப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு.
டிரைவர் சிவா கூறியதாவது: வாகனங்களின் நச்சுப் புகை மாசை கட்டுப்படுத்தவும், சாலையில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சம் டிரைவரை பாதிப்பதை தவிர்க்கவும் அரளிச் செடி நட வேண்டும் என்பது விதி. தவிர முட்செடிகள் ரோடு வரை வளர்ந்துள்ளதால் வாகனம் ஓட்டுவது சிரமமாக உள்ளது. இப்பணிகளுக்காக நான்குவழிச்சாலை நிர்வாகம் நாளொன்றுக்கு பல ஆயிரத்திற்கு மேல் ஒப்பந்ததாரர்களுக்கு செலவுத்தொகை கொடுக்கின்றனர். ஆனால் ஒப்பந்ததாரர் முறையாக பராமரிக்கவில்லை இது குறித்து நிர்வாகத்திடம் டிரைவர்கள் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்றார்.
ஒப்பந்ததாரர் சுகுமார் கூறுகையில், முட்செடிகளை அகற்றி வருகிறோம். விரைவில் அரளிச் செடிகள் ஊன்றப்படும் என்றார்.