ADDED : பிப் 12, 2024 05:25 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே வடுகபட்டி பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.10ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்தால பகவதி அம்மன் பரிபாலனை அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
உசிலம்பட்டி
தொட்டப்பநாயக்கனுார் ஜமீன் கிராமத்தில் பழமையான ஜக்கம்மாள் கோவில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை கணபதி ஹோமம், வாஸ்து, யாகசாலை பிரவேச வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை யாகசாலை பூஜைகளுக்குப்பின் புனிதநீர் கொண்டு ஜக்கம்மாள் கோயில் கருவறையில் அபிஷேகம் நடத்தினர்.
ஜமீன்தார் பாண்டியர், உசிலம்பட்டி எம்.எல்.எ., அய்யப்பன், ஊராட்சித்தலைவர் பாலமுருக மகாராஜா மற்றும் ஜமீன் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று பிப்.12 ல், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
மேலுார்
கீழவளவில் முத்துவிநாயகர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு பிப். 10 யாகசாலை பூஜைகள் துவங்கியது. இரண்டாம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கீழையூர், கீழவளவு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.