Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம்

ADDED : மே 15, 2025 02:13 AM


Google News
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இந்தாண்டு கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து பிப். 10 ல் பாலாலயம் நடத்தி பணிகள் துவங்கியது.

முதற்கட்டமாக அறங்காவலர் குழுவினர் செலவில் உப கோயில்களான சொக்கநாதர் கோயில், பழனியாண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் ஏப். 16ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது

இரண்டாம் கட்டமாக சரவணப் பொய்கை ஆறுமுக நயினார் கோயில், மலைக்குப் பின்புறம் பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த மே 4ல் பலாலயம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகம் துவங்கும் வகையில் மே 23ல் யாகசாலை முகூர்த்தகால் நிர்மாணம் செய்யப்பட உள்ளது. ஜூலை 10ல் யாகசாலை பூஜை துவங்கி, ஜூலை 14ல் பூர்த்தி செய்து அதிகாலை 5:25 முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன் தெரிவித்தனர்.

தேங்காய் தொடும் முகூர்த்தம்


நேற்று காலை கோயிலில் இருந்து தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு, மாலை, சந்தனம், குங்குமம் ஆகியவற்றுடன் சிவாச்சாரியார்கள் ராஜா, ரமேஷ், ஆனந்த், அஜித், ஷண்முகசுந்தரம், பேஷ்கார் கோயில் அலுவலகம் வந்தனர். அங்கு துணை கமிஷனர் சூரிய நாராயணனிடம் தேங்காய் கொடுக்க அவர் அதை தொட்டுக் கொடுத்தார். பின்பு கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் வாசிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us