ADDED : மே 15, 2025 02:16 AM
பேரையூர்; பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நச்சுப் புகை வெளியிடும் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் பல 'குபுகுபு'வென புகையைக் கக்கியபடி பறக்கின்றன. அந்த வாகனங்களை பின்தொடரும் வாகன ஓட்டிகள் கரும்புகையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாகனங்களையே இயக்க வேண்டும். இதற்காக பழைய மோட்டார் வாகனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் சான்று பெற்ற வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.