ADDED : ஜன 06, 2024 06:05 AM
மதுரை: காஞ்சி மகா பெரியவா 30வது ஆண்டு ஆராதனையை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் ஜன.,7,8 ல் எஸ்.எஸ். காலனி பிராமண கல்யாண மகாலில் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
ஜன.,7 காலை ஸ்ரீமகா பெரியவா மகிமை என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசுகிறார். மாலை 6:00 மணிக்கு சிறுவன் சூரியநாராயணனின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 8 காலை மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் நடமாடும் தெய்வம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
ஆன்மிக சான்றோருக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் விருது வழங்குகிறார். மாலை 4:00 மணிக்கு நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிறுவனர் நெல்லை பாலு செய்து வருகிறார்.