/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உயர்நீதிமன்ற பொங்கல் விழா பாட்டுப்பாடி அசத்திய நீதிபதி உயர்நீதிமன்ற பொங்கல் விழா பாட்டுப்பாடி அசத்திய நீதிபதி
உயர்நீதிமன்ற பொங்கல் விழா பாட்டுப்பாடி அசத்திய நீதிபதி
உயர்நீதிமன்ற பொங்கல் விழா பாட்டுப்பாடி அசத்திய நீதிபதி
உயர்நீதிமன்ற பொங்கல் விழா பாட்டுப்பாடி அசத்திய நீதிபதி
ADDED : ஜன 08, 2025 06:40 AM

மதுரை : உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தலைவர் ஆனந்தவள்ளி தலைமை வகித்தார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசியதாவது: திருவிழாக்கள் அவசியம். விளைச்சலுக்கு உதவிய சூரியன், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழா பொங்கல் விழா.வேட்டை சமூகமாக இருந்தபோது பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. வேளாண் சமூகமாக மாறியபின் ஆண்களால் பெண்கள் வீழ்த்தப்பட்டனர். அடிமையாக இருந்த பெண்கள் விழித்துக் கொண்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பல துறைகளில் முன்னேறியுள்ளனர்.
இதை பார்க்க இன்று பாரதியார், வ.வே.சு. அய்யர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மாதவையா இருந்திருந்தால் ஆனந்த கண்ணீர் சிந்தியிருப்பர் என்றார்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் 'வான் நிலா நிலா..,' 'என் இனிய பொன் நிலாவே..,''நிலா அது வானத்து மேலே...,''காதல் ரோஜாவே...,', 'சங்கீத மேகம்..,' உள்ளிட்ட பல்வேறு சினிமா பாடல்களை இன்னிசை குழுவினருடன் இணைந்து பாடி பிரமிக்க வைத்தார். பாராட்டு பெற்றார். வழக்கறிஞர் சாமிதுரை பங்கேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.