/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர் அறிவிப்புஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போட்டி கலெக்டர் அறிவிப்பு
ADDED : ஜன 05, 2024 05:37 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தைமாதம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு ஜன.15ல் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் ரோட்டிலும், ஜன.16 ல் பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலிலும், ஜன.17 ல் அலங்காநல்லுார் கோட்டை முனிவாசல் மந்தைத் திடலிலும் போட்டிகள் நடக்க உள்ளன.
இப்போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த பகுதியிலேயே நடைபெறும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.