/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாடிப்பட்டியில் தீவிரமடைந்த களையெடுப்பு, உரமிடும் பணிகள்வாடிப்பட்டியில் தீவிரமடைந்த களையெடுப்பு, உரமிடும் பணிகள்
வாடிப்பட்டியில் தீவிரமடைந்த களையெடுப்பு, உரமிடும் பணிகள்
வாடிப்பட்டியில் தீவிரமடைந்த களையெடுப்பு, உரமிடும் பணிகள்
வாடிப்பட்டியில் தீவிரமடைந்த களையெடுப்பு, உரமிடும் பணிகள்
ADDED : ஜன 13, 2024 04:01 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு சாகுபடி நிலங்களில் 2வது களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பகுதியில் வைகை பெரியாறு பாசனத்தில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன.
விவசாய பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் களைகளை கட்டுப்படுத்த, விவசாயிகள் களைக் கொல்லி மருந்து தெளித்து களைகளை அழித்தனர். நடவு பணிக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பதால் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.
தற்போது குளிர் காற்று, மழை, பனி என பருவநிலை மாற்றத்தால் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனை விவசாயிகள் பூச்சி மருந்து தெளித்தும், களைக்கொல்லி மருந்து தெளித்தும் நேரடி நெல் விதைப்பு நிலங்களில் முற்றிலும் களைகளை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்திய மழையால் குறிப்பிட்ட நேரத்தில் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் போனது. மழை பெய்யும் போது உரம் இட்டால் அது பயிர்களுக்கு பயன் தராது என விவசாயிகள் தெரிவித்தனர்.