ADDED : ஜன 01, 2024 05:38 AM
மேலுார்; சென்னகரம்பட்டியில் மதுரை வேளாண் பல்கலையின் பயிர் நோயியல் துறை சார்பில் மாதிரி கிராமம் ஒற்றைசாளர தகவல் மையம் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் ஸ்ரீதர் வரவேற்றார். பேராசிரியர் ரேவதி தலைமை வகித்தார். கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் சுபாசாந்தி, நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் காமேஷ்வரன், வேளாண் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன் பேசினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகி பீர் முகமது செய்திருந்தார். உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.