/உள்ளூர் செய்திகள்/மதுரை/தெப்பத்திருவிழா போக்குவரத்து மாற்றம் மதுரையில் எப்படிதெப்பத்திருவிழா போக்குவரத்து மாற்றம் மதுரையில் எப்படி
தெப்பத்திருவிழா போக்குவரத்து மாற்றம் மதுரையில் எப்படி
தெப்பத்திருவிழா போக்குவரத்து மாற்றம் மதுரையில் எப்படி
தெப்பத்திருவிழா போக்குவரத்து மாற்றம் மதுரையில் எப்படி
ADDED : ஜன 25, 2024 05:30 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்ணா நகரிலிருந்து வைகை வடகரை ரோடு பி.டி.ஆர், பாலம் வழியாக தெப்பகுளம் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. இவ்வழியாக வரும் பக்தர்கள் வைகை வடகரை ரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு பி.டி.ஆர்., பாலம் வழியாக நடந்து சென்று தெப்பக்குளத்தை அடையலாம். இந்த ரோட்டின் வழியாக விரகனுார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் குருவிக்காரன் ரோடு வழியாக புதிய தெற்கு வைகைக்கரை ரோடு சென்று விரகனுார் செல்லாம்.ஆவின், குருவிக்காரன் ரோடு வழியாக விரகனுார் செல்லும் அரசு பேருந்து, பொதுமக்கள் வாகனங்கள், குருவிக்காரன் ரோடு தென்கரை சந்திப்பு சென்று ரிங்ரோடு செல்லவேண்டும்.
விரகனுார் ரிங்ரோடு வழியாக தெப்பக்குளத்திற்கு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.விரகனுாரிலிருந்து வரும் வாகனங்கள் குருவிக்காரன் ரோடு வழியாக வைகை தென்கரை சென்று நகருக்குள் செல்லலாம். விரகனுாலிருந்து வரும் டூவீலர்கள் வைகை தென்கரை ரோடு பழைய ராமநாதபுரம் செக்போஸ்ட் அருகே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கணேஷ் தியேட்டர் சந்திப்பிலிருந்து தெப்பக்குளம், அண்ணாநகர், விரகனுார் செல்ல அனுமதியில்லை. பயணிகள் வசதிக்காக தெப்பக்குளம் 16 கால் மண்டபத்திற்கும் கணேஷ் தியேட்டர் சந்திப்பிற்கும் இடையே பெட்ரோல் பல்க் அருகே தற்கால பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது.
அனுப்பானடியிலிருந்து வாகனங்ளுக்கு அனுமதி கிடையாது. டீச்சர்ஸ் காலனியில் வாகனங்களை நிறுத்தி நடந்து செல்லாம் என போலீஸ்சார் அறிவித்துள்ளனர்