/உள்ளூர் செய்திகள்/மதுரை/தமுக்கத்தில் வீடு, மனை கண்காட்சி: இன்று நிறைவுதமுக்கத்தில் வீடு, மனை கண்காட்சி: இன்று நிறைவு
தமுக்கத்தில் வீடு, மனை கண்காட்சி: இன்று நிறைவு
தமுக்கத்தில் வீடு, மனை கண்காட்சி: இன்று நிறைவு
தமுக்கத்தில் வீடு, மனை கண்காட்சி: இன்று நிறைவு
ADDED : ஜன 28, 2024 04:30 AM

மதுரை : இந்திய கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில் 'பேர் புரோ 2024' எனும் வீடு, மனைகள் விற்பனை கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானம் கன்வென்ஷன் ஹாலில் ஜன.26ல் துவங்கியது.
மக்களின் கனவு இல்லத்தை எளிய முறையில் சொந்தமாக்கும் வகையில் 30க்கும் மேல் பில்டர்ஸ், 100க்கும் மேல் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், குறைந்த வட்டியில் கடன் வழங்க 10க்கும் மேற்பட்ட வங்கிகள், கட்டுமான பொருட்கள், விற்பனையாளர்களின் 50க்கும் மேல் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. வீடு, மனைகள் வாங்க முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.
'கிரடாய்' தமிழக தலைவர் இளங்கோவன், மதுரை தலைவர் முத்து விஜயன், சேர்மன் ராமகிருஷ்ணன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் ஸ்ரீகுமார் ஏற்பாடுகளை செய்துள்ளனர். கண்காட்சி இன்று (ஜன.28) காலை 10:00 முதல் இரவு 8:00 மணியுடன் நிறைவடையும். அனுமதி இலவசம்.