/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் தள்ளுபடிஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கட்டுப்பாடு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜன 13, 2024 04:55 AM
மதுரை : மதுரை அவனியாபுரம் உள்ளிட்ட 3 ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே ஒரு உரிமையாளரின் காளையை அனுமதிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம் (ஜன.,15), பாலமேடு (ஜன.,16), அலங்காநல்லுாரில் (ஜன.,17) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு அமைப்பின் நிர்வாகிகள் என்ற பெயரில் உள்ளவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்த சிலரது காளைகள் மட்டுமே அதிகமாக போட்டியில் பங்கேற்க தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.
சாதாரண மனிதர்களுக்கு சொந்தமான காளைகளை அனுமதிப்பதில்லை. இது தொடர்ந்தால் போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டு உரிமை குறிப்பிட்ட சிலருக்காக நடத்தப்படும் போட்டியாக மாறிவிடும்.
அவனியாபுரம் உள்ளிட்ட 3 ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே ஒரு உரிமையாளருக்கு சொந்தமான காளையை அனுமதிப்பது என்ற விதிகளை வகுக்க வேண்டும். பாகுபாடின்றி சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: கலெக்டர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.