/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அழகர்கோவிலில் கட்டுமானப் பணி தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு அழகர்கோவிலில் கட்டுமானப் பணி தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அழகர்கோவிலில் கட்டுமானப் பணி தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அழகர்கோவிலில் கட்டுமானப் பணி தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அழகர்கோவிலில் கட்டுமானப் பணி தற்போதைய நிலை தொடர வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 02, 2025 05:49 AM
மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு உள்ளிட்ட 4 கட்டுமான பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மேலுார் வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடியில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், பிரமுகர்கள் தங்கும் விடுதி உட்பட பல மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
பணியை கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன்: கட்டுமானத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. வனத்துறையிடம் தடையில்லாச் சான்று பெறவில்லை. அர்ச்சகர்கள் ஏற்கனவே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு புதிதாக குடியிருப்பு அமைப்பது தேவையற்றது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் வனம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.
கோயில் தரப்பு வழக்கறிஞர் மனோகரன்: ஏற்கனவே இதுபோல் தாக்கலான ஒரு வழக்கை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது உரிய அனுமதியுடன் கட்டுமான பணி நடக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் வளாக கிழக்கு பகுதி பெரியாழ்வார் திருவரசு மற்றும் தெற்கில் வசந்த மண்டபம் பகுதியில் கோட்டைச் சுவரை திரும்ப கட்டுதல், கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்க புது விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.
அறநிலையத்துறை செயலர், கமிஷனர், கோயில் செயலர் அலுவலர் செப்.15 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
ஆக.28ல் இதுபோன்ற மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதிகள் அமர்வு,'கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது.