/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : செப் 04, 2025 05:08 AM
மதுரை: தமிழக சட்டசபை தேர்தல் முடியும்வரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கலான வழக்கில் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2026 ல் தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் ஆஜரானார்.
நீதிபதிகள்: ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியது ஏற்புடையதல்ல. தாக்குதலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர் கோட்டைச்சாமி: திருச்சி, வேலுார் மாவட்டங்களில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
டி.ஜி.பி., பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நீதிபதிகள் செப்.,12 க்கு ஒத்திவைத்தனர்.