/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேசிய முதியோர் மையம் அமைக்க வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி தேசிய முதியோர் மையம் அமைக்க வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேசிய முதியோர் மையம் அமைக்க வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேசிய முதியோர் மையம் அமைக்க வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேசிய முதியோர் மையம் அமைக்க வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : செப் 11, 2025 11:29 PM
மதுரை:தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையம் அமைக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய சுகாதாரத்துறையின் தேசிய முதியோர் சுகாதார பராமரிப்புத் திட்டம் முதியோருக்கு மருத்துவ உதவி, மறுவாழ்வு அளிக்க வழிவகுக்கிறது.
இதன் மூலம் தமிழகத்தில் தேசிய முதியோர் மையத்தை (என்.சி.ஏ.,) நிறுவ மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மூத்த குடிமக்களின் நலனிற்காக மத்திய, மாநில அரசுகள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்தகைய மையங்கள் போதுமானதா அல்லது போதுமானதாக இல்லையா அல்லது நிறுவ வேண்டிய மையங்களின் எண்ணிக்கை குறித்து இந்நீதிமன்றம் விசாரிக்க முடியாது.
மக்களின் நலனிற்காக திட்டங்களை படிப்படியாக செயல்படுத்துவது அரசின் கடமை. செயல்படுத்துவது கொள்கை முடிவின் ஒரு பகுதி.
மனுவில் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.