/உள்ளூர் செய்திகள்/மதுரை/விவசாய கூலிகளுக்கு கை கொடுக்கும் மூலிகை செடிகள்விவசாய கூலிகளுக்கு கை கொடுக்கும் மூலிகை செடிகள்
விவசாய கூலிகளுக்கு கை கொடுக்கும் மூலிகை செடிகள்
விவசாய கூலிகளுக்கு கை கொடுக்கும் மூலிகை செடிகள்
விவசாய கூலிகளுக்கு கை கொடுக்கும் மூலிகை செடிகள்
ADDED : ஜன 31, 2024 07:08 AM

பேரையூர் : பேரையூர் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் களை செடிகள் அதிகம் முளைத்துள்ளன. இதில் மூலிகைச் செடிகள் அதிகம் இருப்பதால் அதை விவசாயக் கூலிகள் பறித்து வியாபாரிகளிடம் விற்கின்றனர். வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.
பேரையூர் பகுதியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட இலை, செடி, வேர்கள் மருந்து தயாரிப்பிற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
தும்மநாயக்கன்பட்டி, பாரைப்பட்டி, கீழப்பட்டி, தொட்டியபட்டி உட்பட பல கிராமங்கள் மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ளன. இங்குள்ள சமவெளி, மலைச் சரிவுகளில் கொழுஞ்சி, துளசி, வேலிப்பருத்தி, முடக்கத்தான், காப்பு செடி, சாரங்கத்தி, நன்னாரி உட்பட 100 க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த இலை, செடி, வேர்கள் கிடைக்கின்றன. முதியவர்கள், பெண்கள் பலர் இவ்வகை மூலிகை தாவரங்களை சேகரித்து விற்று ரூ.200 முதல் ரூ.400 வரை வருமானம் ஈட்டுகின்றனர்.