/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜன 01, 2024 05:47 AM
மதுரை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை ஓட்டல் நிர்வாகங்கள் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன. நுழைவு கட்டணம் செலுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று பகலில்பஸ்ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு தடுப்பு போலீஸார் சோதனை செய்தனர்.
ஜாலி ரெய்டு போன்ற நிகழ்வை தடுக்கும் விதமாக மதுரை- - நத்தம் மேம்பாலம், வைகை கரை ரோடுகளில் நேற்று இரவு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. முக்கிய ரோடுகளில் சிறப்பு வாகன தணிக்கை செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமுறையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட குழு வினர் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பணியை கண்காணித்தனர். சி.சி.டி.வி., கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.